இந்த வீடியோவை பார்த்தால் தெரியும்.
( ஐஸ் செய்ய கரண்ட் வேண்டும் இல்லையா ? ))

Wednesday, October 17, 2007
ஏழைகளின் ஏசி
Posted by
IdlyVadai
at
12:55 PM
1 comments
Labels: கண்டுபிடிப்பு, செய்தி, விஞ்ஞானம்
Monday, October 15, 2007
நான் ஒரு முட்டாளுங்க !
நம் நாட்டின் பிரதமர் யார் ?
மன் மோகன் சிங்,
மாடிவீட்டு குப்புசாமி,
அடுத்தாத்து அம்புஜம்
இதற்கு விடை தெரிந்தால் மேற்கொண்டு கீழே படிக்கலாம்...
டிவி சேனல்களில் ரியாலட்டி நிகழ்ச்சிகளில் நேயர்களுக்கு கேள்விகளை கேட்டு, உங்களுக்கு சரியான விடை தெரிந்தால் எங்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்புங்கள் என்று அறிவிப்பார்கள்.
உதாரணத்திற்கு கேள்வி இப்படி இருக்கும்
நம் நாட்டின் பிரதமர் யார் ?
மன் மோகன் சிங்,
மாடிவீட்டு குப்புசாமி,
அடுத்தாத்து அம்புஜம்
இதில் எந்த விடையை அனுப்பினாலும் அந்த சேனலுக்கு லாபம் தான். ஒரு கிராம் தங்கத்திற்கோ, அல்லது ஒரு கிலோ வெங்காயத்திற்கோ ஆசைபட்டு நம்ம மக்கள் உடனே எஸ்எம்எஸ் அனுப்பிவிடுவார்கள்.
சன் மியூசிக் சேனலில் பார்த்தால் "நான் ஒரு முட்டாளுங்க" பாடல் ஓடிக்கொண்டிருக்கும், கீழே "பாமா ஐ லவ் யூ, "சீவாஜி தாண்டா பாஸ்" போன்ற அறிய தகவல்கள் நிறைந்த எஸ்எம்எஸ்-க்களை பார்த்தால் நாட்டில் எவ்வளவு பேர் வேலையுடன் இருக்கிறார்கள் என்பது புரியும்.
ஜோடி நம்பர் 1, சன் டிவி தங்க வேட்டை, குரேர்பதி நிகழ்ச்சி, மதன்'ஸ் திரைபார்வை, கலக்க போவது யாரு?, என்று எல்லா நிகழ்ச்சிகளிலும் இந்த கூத்து இருக்கிறது.
இந்த மாதிரி அனுப்பும் எஸ்எம்எஸ் ஒன்றுக்கு 4 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை உங்களிடம் வசூலிக்கபடுகிறது.
சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றில் பதிவான வாக்குகள் 1.5 லட்சம். ஒரு வாக்குக்கு 4 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் இதில் கிடைத்த வருவாய் 6 லட்சம்.
இந்த பச்சா நிகழ்ச்சிக்கே இவ்வளவு என்றால் அமிதாபச்சன் நிகழ்ச்சிக்கு எவ்வளவு வரும் ? 50 மில்லியன் எஸ்எம்எஸ்க்கு மேல் என்கிறது தகவல் !
ஸீ தொலைக்காட்சி நிறுவனம் ஒரு மாதத்தில் 10 முதல் 50 மில்லியன் எஸ்எம்எஸ்-களை பெறுகிறது. ஸ்டார் டிவிக்கு மாதம் ஒன்றுக்கு 5 முதல் 15 மில்லியன் எஸ்எம்எஸ்-கள் வந்து குவிகிறது. சோனி தொலைக்காட்சியின் இந்தியன் ஐடல் நிகழ்ச்சிக்கு மட்டும் 10 கோடி எஸ்எம்எஸ்-கள் குவிந்துள்ளன.
தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வந்து குவியும் எஸ்எம்எஸ்-கள் ஏராளம். அனைத்தையும் சரிபார்த்து முடிவுகளை வெளியிடுவது எவ்வாறு நடைபெறுகிறது என்பது முக்கியமான ஒன்று. குவியும் எஸ்எம்எஸ் மற்றும் தொலைபேசி அழைப்புகளை இந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் சமாளிக்கும் விதம் சுவாரஸ்யமானது.
இதற்கென்றே தொலைக்காட்சி சானல்கள் தகவல் தொழில்நுட்ப குழு ஒன்றை நியமித்து நிர்வாகம் செய்து வருகிறது. இந்த குழுவினருக்கு அனைத்து எஸ்எம்எஸ்-களையும் ஆராய்ந்து முடிவுகளை வெளியிட 10 அல்லது 20 நிமிடங்களே உள்ளது. இதற்கு ஸீ தொலைக்காட்சி தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பிற்கு ரூ.5 கோடி முதல் 10 கோடி வரை முதலீடு செய்திருக்கிறது.
செல்பேசி இணைப்பு வழங்கும் நிறுவனங்களுக்கும் இந்த எஸ்எம்எஸ்-களை நிர்வாகம் செய்யும் பணிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இதனால் உருவாகும் மொத்த வருவாயில் 70 சதவீதம் தொலைபேசித் துறைக்கு செல்கிறது. 30 சதவீதம் மட்டுமே தொலைக்காட்சி சேனல்களுக்கு கிடைக்கிறது. 30 சதவீத லாபத்திற்கு இவ்வளவு முதலீடுகள் செய்யப்படுகிறது என்றால், இதன் மூலம் வரும் மொத்த வருவாயை யோசித்துப் பாருங்கள். அந்நியனில் வரும் ஐந்து பைசா உதாரணம் ஞாபகத்துக்கு வரும்
Posted by
IdlyVadai
at
2:10 PM
1 comments
Saturday, October 13, 2007
மோட்டரோலாவின் புதிய மொபைல் போன்
சோனி எரிக்சன் நிறுவனத்தின் டபிள்யூ சீரிஸ் வாக்மேன் சீரிஸ் மியூசிக் போனை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து இப்ப மோட்டரோலா இப்ப இதே மாதிரி 7 மாடல் போன்களை அறிமுகபடுத்தியுள்ளது - W156, W160, W175, W180, W206, W213, W377. லேட்டஸ்ட் மாடல் MOTO U9.
டிஜிட்டல் மியூசிக் பிளேயர், 20 சேனல்களை பதிவு செய்து வைத்துக் கொள்ளக்கூடிய ஸ்டீரியோ எப்எம் ரேடியோ, 4GB வரை விரிவாக்கக்கூடிய மெமோரி (25 எம்பி கார்ட் பொருத்தப்பட்டது), 2MP விஜிஏ கேமரா போன்றவை புதிய வாக்மேன் போனில் இடம்பெற்றிருக்கும்
டச் ஸ்கிரின், விண்டோஸ் மீடியா பிளேயர், வீடியோ படம் எடுக்கலாம், மெயில் அனுப்பலாம் என்று எக்கசக்க வசதிகள் இருக்கு.
இவை எல்லாத்தைவிட இந்த மொபைல் போனில் பேசலாமாம் :-)
Posted by
IdlyVadai
at
8:26 PM
1 comments
Labels: மொபைல்
Friday, October 12, 2007
மோசர் பியர் செய்யும் புரட்சி
தூக்கத்திலிருந்து எழுது வருகிறார் தமிழ் ரோபோ. இனி தினமும் ஒரு பதிவாவது வரும்.
அன்புடன்,
இட்லிவடை
மோசர் பியர் செய்யும் புரட்சி
பழைய நியூஸ்: வீடியோ சிடி தயாரிப்பு நிறுவனமான அல்ட்ரா வீடியோ நிறுவனத்தின் வசமிருந்த 900 ஹிந்தி மற்றும் குஜராத்தி திரைப்படங்களின் சிடி பதிப்பு உரிமையை மோசர் பியர் வாங்கியுள்ளது.
தற்போது 800 ஹிந்தி மற்றும் 100 குஜராத்தி திரைப்படங்களின் சிடி பதிப்பு உரிமையை வாங்கியதன் மூலம் மோசர் பியர் நிறுவனத்தின் உரிமம் பெற்ற ஹிந்தி படங்களின் எண்ணிக்கை 2,500 ஆகவும், குஜராத்தி படங்களின் எண்ணிக்கை 400 ஆகவும் அதிகரித்துள்ளது. கூடிய சீக்கிரம் 9 ஆயிரம் படங்களின் பதிப்பு உரிமை மோசர்பியர் வசமாகுமாம் !
Posted by
IdlyVadai
at
1:15 PM
1 comments
Tuesday, May 22, 2007
ஸ்ரேயாவின் தொப்புளால் மின்சாரம் சேமிப்பு!
சில மாதங்களுக்கு முன் TreeHugger Mark Ontkush தன் வலைப்பதிவில் இவ்வாறு எழுதினார். கருப்பு கூகிளினால்750 Megawatt ஒரு வருடத்துக்கு சேமிக்கலாம் என்று.
எப்படி ?
கூகிளின் வெண்மை நிற பக்கங்களை நம் மானிட்டரில் காண்பிக்க 74 வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. கருப்பு நிற கூகிளுக்கு வெறும் 59 வாட் தான் தேவை படுகிறது. கூகிளுக்கு ஒரு நாளைக்கு 200 மில்லியன் தேடல் ஹிட்ஸ் வருகிறது. கூகிள் காண்பிக்கும் பக்கத்தை நீங்கள் 10 வினாடி பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால், 550,000 மணி நேரம் கூகிள் நம்முடைய மானிட்டரில்!. கருப்பு கூகிள் என்றால் 15 வாட் சேமிப்பு; 8.3 மெகா வாட் ஒரு நாளைக்கும்; 3000 மெகா வாட் ஒரு வருடத்துக்கும் செமிக்க முடியும்!. ஒரு கிலோ வாட் ஒரு மணி நேரத்துக்கு 10 செண்ட் என்றால் ஒரு வருடத்துக்கு $75,000 சேமிப்பு! ( 25% மானிட்டர் CRT வகை என்று வைத்துக்கொண்டால் ).
ஸ்ரேயாவின் தொப்புளை கிளிக் செய்து ஷாக் அடித்து வந்தவர்களுக்கு ஒரு கேள்வி ஸ்ரேயாவின் தொப்புளால் எவ்வளவு மின்சாரம் சேமிப்பு ?
Posted by
IdlyVadai
at
1:58 PM
5
comments
Labels: சுற்றுச்சூழல்
Wednesday, April 25, 2007
பூமியைப் போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு!!
பூமியைப் போன்ற தோற்றமுடைய புதிய கிரகத்தை ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகத்தில் உயிர் வாழ்வதற்குத் தேவையான தட்ப வெப்ப நிலையும், தண்ணீரும் இருப்பதாக அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானியும், இந்த புதிய கிரகம் குறித்த ஆய்வில் ஈடுபட்ட குழுவின் தலைவருமான ஸ்டீபன் உத்ரி கூறுகையில்,
சூரிய குடும்பத்திலிருந்து இது தனித்து வெளியே இருக்கிறது. சிவப்பு நிறத்தில் இந்த கிரகம் காணப்படுகிறது.
இதற்கு OGLE-2005-BLG-390Lb என பெயரிடப்பட்டுள்ளது. பூமியை விட மிகப் பெரிதாக இது இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது கிளீஸ் 581 என்ற நட்சத்திரத்தை சுற்றி வந்து கொண்டுள்ளது.
இந்தப் புதிய கிரகத்தில் பாறைகள் நிறைந்து காணப்படுவதாக கணித்துள்ளோம். அதேபோல உயிரினங்கள் வசிக்க் கூடிய தட்பவெப்ப நிலையும், தண்ணீரும் இருப்பதாகவும் தெரிகிறது. இந்த கிரகத்தில் பூஜ்யம் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை தட்பவெப்பம் நிலவுவதாக கணிக்கப்பட்டுள்ளது. தண்ணீர், திரவ நிலையில் இங்கு இருக்கலாம்.சூரியக் குடும்பத்திற்கு வெளியே இதுவரை 200க்கும் மேற்பட்ட கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்துமே வாயுக்களால் நிரம்பியவை. ஆனால் இந்தப் புதிய கிரகம் கிட்டத்தட்ட பூமியைப் போலவே இருப்பதாக நினைக்கிறோம்.
இந்த கிரகத்தின் சுற்று வட்டம் பூமியின் சுற்று வட்டத்தை விட 1.5 மடங்கு அதிகம். இந்த கிரகத்தில் பல கடல்களும் இருக்கக் கூடும். பூமியைப் போலவே இது இருப்பதால் இந்தக் கிரகம் குறித்த ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும். எதிர்காலத்தில் பல அரிய தகவல்களும், ஆச்சரிய தகவல்களும் நமக்குக் கிடைக்கக் கூடும்.
இந்தப் புதிய கிரகம் பூமியிலிருந்து 125 டிரில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்றார் உத்ரி.
சிலியில் உள்ள லா சில்லா நகரில் பொருத்தப்பட்டுள்ள அதி நவீன தொலைநோக்கி மூலம் இந்த புதிய கிரகதத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
Posted by
IdlyVadai
at
1:48 PM
2
comments
Labels: விண்வெளி
Thursday, April 12, 2007
காடுகள் அழிப்பால் சமூகக் குழப்பம் ஏற்படுவதாக கிரீன்பீஸ் எச்சரிக்கை
BBC: ஆப்ரிக்க கண்டத்திலுள்ள காங்கோ மக்கள் குடியரசில் இருக்கும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மழைக்காடுகளை சர்வதேச அளவில் மரம் வெட்டும் குழுக்கள் வெட்டுவதன் மூலம் பெருமளவில் சமுதாய குழப்பங்களை விளைவித்து, சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள் என சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பான கிரீன்பீஸ் எனும் அமைப்பு கூறியுள்ளது.
2002 ஆம் ஆண்டில் அங்கு புதிதாக மேலும் மரங்களை வீழ்த்த தடைவிதிக்கப்பட்ட பிறகு மட்டும் சுவிட்சர்லாந்து நாட்டின் பரப்பளவை விட பெரிய அளவில் மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளன என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அங்குள்ள மழைக்காடுகளின் பகுதிகளில் உள்ள மரங்களை வெட்டி விற்பதன் மூலம் தங்களது ஏழ்மைநிலை மேம்படும் என உள்ளூர் சமூகத்தினர் ஒரு மாயவலையில் சிக்க வைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் எனக் கூறியுள்ள கிரீன்பீஸ் அமைப்பு அங்கு பல ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள காடுகளை சில நூறு டாலர்களே பெறுமான பரிசுப் பொருட்களை கொடுத்து மககள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளது..
Posted by
Boston Bala
at
12:50 AM
2
comments
Labels: சுற்றுச்சூழல், செய்திகள்