Wednesday, October 17, 2007

ஏழைகளின் ஏசி

இந்த வீடியோவை பார்த்தால் தெரியும்.




( ஐஸ் செய்ய கரண்ட் வேண்டும் இல்லையா ? ))

Read More...

Monday, October 15, 2007

நான் ஒரு முட்டாளுங்க !

நம் நாட்டின் பிரதமர் யார் ?
மன் மோகன் சிங்,
மாடிவீட்டு குப்புசாமி,
அடுத்தாத்து அம்புஜம்

இதற்கு விடை தெரிந்தால் மேற்கொண்டு கீழே படிக்கலாம்...


டிவி சேனல்களில் ரியாலட்டி நிகழ்ச்சிகளில் நேயர்களுக்கு கேள்விகளை கேட்டு, உங்களுக்கு சரியான விடை தெரிந்தால் எங்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்புங்கள் என்று அறிவிப்பார்கள்.

உதாரணத்திற்கு கேள்வி இப்படி இருக்கும்

நம் நாட்டின் பிரதமர் யார் ?
மன் மோகன் சிங்,
மாடிவீட்டு குப்புசாமி,
அடுத்தாத்து அம்புஜம்

இதில் எந்த விடையை அனுப்பினாலும் அந்த சேனலுக்கு லாபம் தான். ஒரு கிராம் தங்கத்திற்கோ, அல்லது ஒரு கிலோ வெங்காயத்திற்கோ ஆசைபட்டு நம்ம மக்கள் உடனே எஸ்எம்எஸ் அனுப்பிவிடுவார்கள்.

சன் மியூசிக் சேனலில் பார்த்தால் "நான் ஒரு முட்டாளுங்க" பாடல் ஓடிக்கொண்டிருக்கும், கீழே "பாமா ஐ லவ் யூ, "சீவாஜி தாண்டா பாஸ்" போன்ற அறிய தகவல்கள் நிறைந்த எஸ்எம்எஸ்-க்களை பார்த்தால் நாட்டில் எவ்வளவு பேர் வேலையுடன் இருக்கிறார்கள் என்பது புரியும்.

ஜோடி நம்பர் 1, சன் டிவி தங்க வேட்டை, குரேர்பதி நிகழ்ச்சி, மதன்'ஸ் திரைபார்வை, கலக்க போவது யாரு?, என்று எல்லா நிகழ்ச்சிகளிலும் இந்த கூத்து இருக்கிறது.

இந்த மாதிரி அனுப்பும் எஸ்எம்எஸ் ஒன்றுக்கு 4 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை உங்களிடம் வசூலிக்கபடுகிறது.

சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றில் பதிவான வாக்குகள் 1.5 லட்சம். ஒரு வாக்குக்கு 4 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் இதில் கிடைத்த வருவாய் 6 லட்சம்.

இந்த பச்சா நிகழ்ச்சிக்கே இவ்வளவு என்றால் அமிதாபச்சன் நிகழ்ச்சிக்கு எவ்வளவு வரும் ? 50 மில்லியன் எஸ்எம்எஸ்க்கு மேல் என்கிறது தகவல் !

ஸீ தொலைக்காட்சி நிறுவனம் ஒரு மாதத்தில் 10 முதல் 50 மில்லியன் எஸ்எம்எஸ்-களை பெறுகிறது. ஸ்டார் டிவிக்கு மாதம் ஒன்றுக்கு 5 முதல் 15 மில்லியன் எஸ்எம்எஸ்-கள் வந்து குவிகிறது. சோனி தொலைக்காட்சியின் இந்தியன் ஐடல் நிகழ்ச்சிக்கு மட்டும் 10 கோடி எஸ்எம்எஸ்-கள் குவிந்துள்ளன.

தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வந்து குவியும் எஸ்எம்எஸ்-கள் ஏராளம். அனைத்தையும் சரிபார்த்து முடிவுகளை வெளியிடுவது எவ்வாறு நடைபெறுகிறது என்பது முக்கியமான ஒன்று. குவியும் எஸ்எம்எஸ் மற்றும் தொலைபேசி அழைப்புகளை இந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் சமாளிக்கும் விதம் சுவாரஸ்யமானது.

இதற்கென்றே தொலைக்காட்சி சானல்கள் தகவல் தொழில்நுட்ப குழு ஒன்றை நியமித்து நிர்வாகம் செய்து வருகிறது. இந்த குழுவினருக்கு அனைத்து எஸ்எம்எஸ்-களையும் ஆராய்ந்து முடிவுகளை வெளியிட 10 அல்லது 20 நிமிடங்களே உள்ளது. இதற்கு ஸீ தொலைக்காட்சி தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பிற்கு ரூ.5 கோடி முதல் 10 கோடி வரை முதலீடு செய்திருக்கிறது.

செல்பேசி இணைப்பு வழங்கும் நிறுவனங்களுக்கும் இந்த எஸ்எம்எஸ்-களை நிர்வாகம் செய்யும் பணிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இதனால் உருவாகும் மொத்த வருவாயில் 70 சதவீதம் தொலைபேசித் துறைக்கு செல்கிறது. 30 சதவீதம் மட்டுமே தொலைக்காட்சி சேனல்களுக்கு கிடைக்கிறது. 30 சதவீத லாபத்திற்கு இவ்வளவு முதலீடுகள் செய்யப்படுகிறது என்றால், இதன் மூலம் வரும் மொத்த வருவாயை யோசித்துப் பாருங்கள். அந்நியனில் வரும் ஐந்து பைசா உதாரணம் ஞாபகத்துக்கு வரும்

Read More...

Saturday, October 13, 2007

மோட்டரோலாவின் புதிய மொபைல் போன்

சோனி எரிக்சன் நிறுவனத்தின் டபிள்யூ சீரிஸ் வாக்மேன் சீரிஸ் மியூசிக் போனை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து இப்ப மோட்டரோலா இப்ப இதே மாதிரி 7 மாடல் போன்களை அறிமுகபடுத்தியுள்ளது - W156, W160, W175, W180, W206, W213, W377. லேட்டஸ்ட் மாடல் MOTO U9.

டிஜிட்டல் மியூசிக் பிளேயர், 20 சேனல்களை பதிவு செய்து வைத்துக் கொள்ளக்கூடிய ஸ்டீரியோ எப்எம் ரேடியோ, 4GB வரை விரிவாக்கக்கூடிய மெமோரி (25 எம்பி கார்ட் பொருத்தப்பட்டது), 2MP விஜிஏ கேமரா போன்றவை புதிய வாக்மேன் போனில் இடம்பெற்றிருக்கும்

டச் ஸ்கிரின், விண்டோஸ் மீடியா பிளேயர், வீடியோ படம் எடுக்கலாம், மெயில் அனுப்பலாம் என்று எக்கசக்க வசதிகள் இருக்கு.

இவை எல்லாத்தைவிட இந்த மொபைல் போனில் பேசலாமாம் :-)

Read More...

Friday, October 12, 2007

மோசர் பியர் செய்யும் புரட்சி

தூக்கத்திலிருந்து எழுது வருகிறார் தமிழ் ரோபோ. இனி தினமும் ஒரு பதிவாவது வரும்.
அன்புடன்,
இட்லிவடை


மோசர் பியர் செய்யும் புரட்சி

பழைய நியூஸ்:
வீடியோ சிடி தயாரிப்பு நிறுவனமான அல்ட்ரா வீடியோ நிறுவனத்தின் வசமிருந்த 900 ஹிந்தி மற்றும் குஜராத்தி திரைப்படங்களின் சிடி பதிப்பு உரிமையை மோசர் பியர் வாங்கியுள்ளது.
தற்போது 800 ஹிந்தி மற்றும் 100 குஜராத்தி திரைப்படங்களின் சிடி பதிப்பு உரிமையை வாங்கியதன் மூலம் மோசர் பியர் நிறுவனத்தின் உரிமம் பெற்ற ஹிந்தி படங்களின் எண்ணிக்கை 2,500 ஆகவும், குஜராத்தி படங்களின் எண்ணிக்கை 400 ஆகவும் அதிகரித்துள்ளது. கூடிய சீக்கிரம் 9 ஆயிரம் படங்களின் பதிப்பு உரிமை மோசர்பியர் வசமாகுமாம் !

குறுந்தகடு மற்றும் டி.வி.டி பிளேயர்களை உற்பத்தி செய்யும் மோசர் பியர், தனது உற்பத்தி தொழிற்சாலையை தமிழகத்தில் நிறுவஉள்ளது. இதற்காக ரூ.2,000 கோடி முதலீடு செய்யப் போகிறது. இந்த தொழிற்சாலை நவீன தொழில் நுட்பத்தை கொண்டதாக இருக்கும். இதன் மூலம் நேரடியாக 4,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமாம்.



புதிய நியூஸ்:
டிவிடி, விசிடியில் புரட்சி செய்த மோசர்பியர் நிறுவனம் இப்ப டிவிடி பிளேயரிலும் புரட்சி செய்ய முடிவு செய்துள்ளது. தற்போது ஒரு நல்ல டிவிடி பிளேயர் 3000-4500 வரை விற்கபடுகிறது. மொசர்பியர் நிறுவனம் நிர்ணையிக்கும் விலை - 1500-2000.

பெருசுங்க நியூஸ்:
மோசர் பியர் தற்போது பிலிப்ஸ், சாம்சங், எல்.ஜி போன்ற நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது. இன்று இந்தியாவில் டிவிடி பிளேயரின் மார்கெட் 26 மில்லியன் ( 2.6 கோடி ), தற்போது வாடிக்கையாளர்களின் எணிக்கை 25% மேல் அதிகரித்து வருவதால் இதில் நல்ல லாபம் வரும் என்று எதிபார்க்கிறார்கள். இந்த 26%ல் டிவிடி மார்கெட் 20% மீதம் 80% மக்கள் இன்னும் விசிடி தான் பார்க்கிறார்கள். நிச்சயம் மோசர் பேர் நிறுவனம் எக்ஸ்சேஜ் ஆப்பர் அறிவிப்பார்கள்.

உலக அளவில் சினிமவினால் வரும் வருமானம் 7500 கோடி ரூபாய் அதில் இந்தியாவின் பங்கு 7% மட்டுமே. அமெரிக்காவில் ஹோம் விடியோ எனப்படும் டிவிடி/விசிடி மார்கெட்டினால் கிடைக்கும் வருமானம் 70%


இளசுங்க நியூஸ்:
விஜய் நடித்த 'புதிய கீதை' நந்தா நடித்த 'கோடம்பாக்கம்' படங்களை இயக்கிய ஜெகன்ஜி, மோசர் பியர் தனியாக தயாரிக்கும் முதல் படத்தை இயக்குகிறார். இப்படத்துக்கு 'ராமன் தேடிய சீதை' என பெயர் வைத்துள்ளனர்.

பிரகாஷ்ராஜின் டூயட் மூவிசும், மோசர் பியர் நிறுவனமும் இணைந்து 'வெள்ளித்திரை' படத்தை தயாரிக்கிறது.

சின்ன கலைவாணர் விவேக் 'சொல்லி அடிப்பேன்' படத்தை போஸ்டரில் மட்டுமே வெளியிட முடிவு செய்துள்ளார். படத்தில் ஸ்டில்களை கூட பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. சமிபத்தில் ஒரு பேட்டியில் நவம்பரில் இந்த படம் வரும் என்கிறார். நல்ல காமெடி. ( காமெடிக்கு விளக்கம்: இவர்தான் தேதி சொல்கிறாரே தவிர, படதயாரிப்பாளரை கோடம்பாக்க ஏரியாவிலேயே காணோம் ). சரி அடுத்தப் படத்துக்கு அஸ்திவாரம் போட்டிருக்கிறார் விவேக். வடிவேலுவின் படத்தைப் போல இதுவும் சரித்திர படம். வடிவேலு நடிக்கும் படத்தின் பெயர், 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்.' விவேக் நடிக்கும் படம் 'கோடம்பாக்கத்தில் பார்த்தசாரதி.' மோசர் பியர் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை ஹரிஹரன் இயக்குகிறார்.



Read More...