Tuesday, March 6, 2007

போர் அடித்தால் கண்டுபிடிக்கும் சாதனம்

Tata Teleservices ஒரே சிப்பினால் ஆன செல் போனை அறிமுக படுத்தியுள்ளது. மோட்ரரோலா Motofone F3c என்று பெயர். 9.1mm, 75grams எடை கொண்டு QSC 6010 சிப்பில் வேலை செய்கிறது.

2010குள், 20 மில்லியன் அகலப்பட்டை இணைப்புக்கள் - தயாநிதி மாறன்.

வலைப்பதிவு வந்ததால் டைரி எழுதுவது குறைந்துவிட்டது என்று ஒரு ஆய்வு சொல்லுகிறது. லண்டனில் 1000 பேரை கேட்ட போது, அதில் 10க்கும் குறைவானவர்கள் தான் டைரி எழுதுவதாக சொன்னார்கள். 47 பேர் வலைப்பதிவு எழுதினார்கள் என்று கணக்கெடுப்பு சொல்லுகிறது.

உங்களுக்கு போர் அடித்தாலோ, அல்லது நீங்க எரிச்சலில் இருந்தாலோ அதை கண்டுபிடிக்க ஒரு சாதனம் கண்டுபிடித்துள்ளார்கள். உங்க பாஸ் இந்த சாதனத்தை வாங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

2 Comments:

சென்ஷி said...

பதிவு ஆரம்பிச்சா விளம்பரம் பண்ணனும்...
கேள்வி கேட்டா மட்டும் போதுமா?

சென்ஷி

IdlyVadai said...

நேற்று இது என்ன என்று இட்லிவடையில் கேட்டேன். ரொம்ப விளம்பரம் வேண்டாம் என்று நினைக்கிறேன்.