Thursday, April 5, 2007

சினிமா: வியாபாரி

அறிவியல் ரீதியான படங்கள் தமிழில் குறைவு. பத்ரகாளிக்கு பதினாறு கை இருப்பது போல் செல்வர்க்கமித்தல் (க்ளோனிங்) செய்து விட்டால்தான், வீட்டுவேலையில் இருந்து விடுதலை என்று அம்மா அடிக்கடி வருத்தப்படுவாள்.

நியூ போன்ற அறிபுனை திரைப்படங்களைக் கொடுத்த எஸ் ஜே சூர்யாவின் அடுத்த ஆக்கம் 'வியாபாரி'. சூர்யாவால் குடும்பத்தையும் பணியையும் ஒரே சமயத்தில் சமாளிக்க முடியவில்லை. தன் பிரதியை உருவாக்கி உலவ விடுகிறார். தமிழ் சினிமாவும் ஆண் நாயகனைத்தான் நகலாக்கம் செய்து காட்டியிருக்கிறது.

அச்சச்சோ... இது அறிவியல் பதிவு! பெண்ணியம், அரசியல் எதற்கு?

செல்வர்க்கமித்தல் குறித்த சில கட்டுரைகள்:



1. “பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்” - Sea urchin சொல்லும் பாடம் - சுந்தரவடிவேல்: ஒரு உயிரியோட மரபணுவைப் பத்தியும், அது உடம்புல எந்தெந்தப் பாகங்கள்ல எந்தெந்த நேரத்துல, வயசுல வேலை செய்யுது, புரதத்தை உற்பத்தி செய்ய ஏற்பாடு பண்ணுது, உண்டான புரதம் என்ன வேலையைச் செய்யும், அந்தப் புரதம் இல்லன்னா என்ன பிரச்சினை, அதை எப்படிச் சரி செய்யிறது…இதையெல்லாம் கண்டுபிடிக்கனும்னா, நமக்கு மரபணுத் தொடரைத் தெரிஞ்சுக்கறது அவசியம்.

2. தண்டு செல்கள் (stem cells) கேள்வி பதில்கள் :: திண்ணை: தண்டு செல்கள் என்னும் stem cells இளம் செல்கள். இவை முட்டையும் விந்துவும் இணைந்து உருவாகும் முதல் செல் பிரிந்து உருவாகும் முதல் செல்கள். இவை பிரிந்து உடலின் 130 வகை வித்தியாசமான திசுக்களாக மாறுகின்றன. அறிவியலாளர்கள். இந்த தண்டு செல்களை பரிசோதனைச்சாலையில் உருவாக்கி அவற்றை ஒரு தனி உறுப்பாக வளரும் படிக்கு ஆணையிட்டாஅல் அவை வளர்ந்து சிறுநீரகமாகவோ, இதயமாகவோ, ஏன் மூளையாகவோ கூட வளரலாம் என்று நம்புகிறார்கள்.

3. குருத்துத் திசுள் - தமிழ் விக்கிபீடியா: உயிரித் தொழில்நுட்பம்

4. என் சிந்தையூடே சிந்திய காப்பியங்கள்: STEM CELLன்னா என்னாங்க: "இம்முறையில் உருவான உறுப்புகள் காலகாலமாக தீராத நோய்களுக்கு அருமருந்தாகவும், விபத்துக்களில் பாதிக்கப்பட்ட மற்றும் செயலிலந்த மனிதனுக்கு ஒரு வரப்பிரசாதமாகவும் அமைந்து விடுகிறது.

இது க்ளோனிங் (cloning) எனப்படும் நகல்தன்மையிடமிடந்து மாறுபட்ட ஒன்றாகும். க்ளோனிங்கின் மூலம் உங்கள் உடல் செல்லின் மரபுத்தன்மையை மட்டும் எடுத்து, மரபுத்தன்மை நீக்கப்பட்ட கருவினுள் செலுத்தி அக்கருவை முழு உயிரினமாக வளரச்செய்தால் அது அச்சு அசலாக உங்களைப் போன்ற ஒருவரை உருவாக்கி விடலாம். ஆனால் ஸ்டெம் செல் உடம்பிலிருந்தே உள்ள செல்களைக்கொண்டு உடல் பாகங்களை உருவாக்கி உயிர்காத்து மற்றும் நோய் தீர்ப்பதால் அதை ஒப்பிலா மருத்துவம் என்றே கூறவேண்டும்."

5. பாலக்கரை பாலனின் பால்ய பார்வை: கருவிலே உருவான அற்புதம்!

கடைசியாக:
6. Vizhippunarvu | Revathi | Medical | Cloning: மரபணு மாற்றுத் (மரண) தொழில்நுட்பம் - உயிர்க்குடுவையை உலுக்கிப் பார்க்கும் ஒரு விபரீத விளையாட்டு :: ரேவதி: "இனி உயிர்கள் பிறக்க அப்பாவும் வேண்டாம்; அம்மாவும் வேண்டாம்; எந்த மதக் கடவுளுக்கும் இனி இங்கே வேலை எதுவுமில்லை; டாலியைப்போல அப்பா, அம்மா இல்லாமல் அச்சடித்தாற்போல ஒரேமாதிரி ஆட்டுக்குட்டிகளை சிறு ஆய்வுக் குழாய்களில் ‘படைக்க’ முடியும். மகனும் தேவையில்லை; மகளும் தேவையில்லை - உங்கள் சந்ததி நிலைத்திருக்க. உங்கள் உடலிலிருந்து ஒரே ஒரு செல், வேர்செல் கிடைத்தால் போதும், எத்தனை அடிமைகள் உங்களுக்குத் தேவை - ஆய்வுக்கூடத்திற்கு உடனே ஆர்டர் செய்யலாம்."


5 Comments:

CVR said...

எனக்கு இந்த படத்தை பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் பதிவை படித்த வரை நான் பார்த்த "Multiplicity" என்ற ஆங்கில படத்தின் கதையை போல இருக்கிறது! :-)

இலவசக்கொத்தனார் said...

பாபா பதிவுன்னா உரல்கள் இல்லாமலேயா. பொறுமையாகப் படிக்க வேண்டும். நன்றி.

Boston Bala said...

சிவியார்...

அசலை இனிமேல்தான் பார்க்க வேண்டும். தமிழில் சிலாக்கியம் இல்லை என்கிறார்கள்.

Boston Bala said...

இலவஸ்...

---உரல்கள் இல்லாமலேயா.­--

எழுதத் தெரியாட்டா, கட்/காபி/பேஸ்ட்-தான் :)

CVR said...

நான் குறிப்பிட்ட அந்த ஆங்கில படம் நான் மிகவும் விரும்பி பார்த்த படம்!!
சந்தர்ப்பம் கிடைக்கும்போது நழுவ விட வேண்டாம்.
S.J.சூர்யா அந்த அந்த கதையை எப்படி எடுத்திருப்பாரோ என்று நினைக்கும்போது நெஞ்சு பதறுகிறது!!:D