BBC: ஆப்ரிக்க கண்டத்திலுள்ள காங்கோ மக்கள் குடியரசில் இருக்கும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மழைக்காடுகளை சர்வதேச அளவில் மரம் வெட்டும் குழுக்கள் வெட்டுவதன் மூலம் பெருமளவில் சமுதாய குழப்பங்களை விளைவித்து, சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள் என சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பான கிரீன்பீஸ் எனும் அமைப்பு கூறியுள்ளது.
2002 ஆம் ஆண்டில் அங்கு புதிதாக மேலும் மரங்களை வீழ்த்த தடைவிதிக்கப்பட்ட பிறகு மட்டும் சுவிட்சர்லாந்து நாட்டின் பரப்பளவை விட பெரிய அளவில் மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளன என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அங்குள்ள மழைக்காடுகளின் பகுதிகளில் உள்ள மரங்களை வெட்டி விற்பதன் மூலம் தங்களது ஏழ்மைநிலை மேம்படும் என உள்ளூர் சமூகத்தினர் ஒரு மாயவலையில் சிக்க வைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் எனக் கூறியுள்ள கிரீன்பீஸ் அமைப்பு அங்கு பல ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள காடுகளை சில நூறு டாலர்களே பெறுமான பரிசுப் பொருட்களை கொடுத்து மககள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளது..
Thursday, April 12, 2007
காடுகள் அழிப்பால் சமூகக் குழப்பம் ஏற்படுவதாக கிரீன்பீஸ் எச்சரிக்கை
Posted by Boston Bala at 12:50 AM
Labels: சுற்றுச்சூழல், செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
அடப்பாவிகளா. ப்ழங்குடியினர் முன்னேற்றம் என்று தங்கள் வயிற்றை நிரப்புவது கட்டாயம் நிறுத்தப்படவேண்டும்.
இருபது வருஷம் கழித்து எல்லை மீறி கட்டுக்கடங்காமல் போன பிற்பாடுதான் 'அப்பவே யோசிச்சிருக்கணும்' என்று நினைப்பார்களோ :(
Post a Comment